தேசிய கீதத்திற்கு தொடர்பின்றி வாயசைத்த டொனால்ட் டிரம்ப் | தினகரன்

தேசிய கீதத்திற்கு தொடர்பின்றி வாயசைத்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய கீதம் ஒலிக்கும்போது தவறாக வாய் அசைத்தது குறித்து சமூகதளங்களில் கடும் கேலிக்கு உள்ளாகியுள்ளார்.

அட்லாண்டாவில் நடைபெற்ற ஒரு கல்லூரி கால்பந்தாட்ட போட்டியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதே மார்பில் கை வைத்து மரியாதை செலுத்திய டிரம்ப் சம்பந்தமே இல்லாமல் வாயசைத்துள்ளார்.

டிரம்ப் தேசிய கீதத்தின் வரிகளை மறந்துவிட்டார் என்று பலரும் கேலி செய்திருக்கும் நிலையில் அவர் மார்பில் கையை வைத்து தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தியதை அவரது ஆதரவாளர்கள் பாராட்டியுள்ளனர்.

தேசிய கீதம் ஆரம்பித்தபோது சரியாக வாயசைத்த டிரம்ப் அதனை தொடர்ந்து தொடபின்றி வாயை அசைக்க ஆரம்பித்தது அது குறித்த வீடியோவில் தெரிகிறது.

டொனால்ட் டிரம்பின் மனநலம் குறித்து விமர்சித்து எழுதிய புத்தகம் ஒன்றை வெள்ளை மாளிகை கடந்த வாரம் கடுமையாக சாடி இருந்தது.

 

 


Add new comment

Or log in with...