சவூதியில் ஒருபால் திருமண வீடியோவில் இருப்போர் கைது | தினகரன்

சவூதியில் ஒருபால் திருமண வீடியோவில் இருப்போர் கைது

ஒருபால் திருமண நிகழ்ச்சி போன்று காட்டும் வீடியோ ஒன்றில் தோன்றிய பல இளைஞர்களையும் சவூதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒருவர் பூ மழை தூவ திருமண ஜோடிகள் போன்று இருவர் அருகருகே கம்பளத்தின் மீது நடந்து வருவதை அந்த வீடியோவில் காணமுடிகிறது. அதில் ஒருவர் மணமகள் போன்று நீண்ட ஆடை அணிந்துள்ளார்.

இந்நிலையில் பெண் போன்று அணிந்த நபர் மற்றும் வீடியோவில் தோன்றும் ஏனையவர்களை அடையாளம் கண்டதாக மக்கா பொலிஸ் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டது. இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு முகம்கொடுத்திருப்பதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மக்காவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில், கடந்த வெள்ளியன்று, ஒரு திருவிழாவின்போது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் அது அங்கிருந்தவர்களுக்கு வியப்பளித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாலின அடையாளங்கள் அல்லது பாலின சார்பு ஆகியவை தொடர்பாக சவூதி அரேபியாவில் பிரத்யேக சட்டங்கள் இல்லையெனினும், திருமண உறவுக்கு வெளியில் கொள்ளும் தொடர்புகள், ஒருபாலுறவு மற்றும் தவறான நடத்தைகள் என்று கருதப்படும் பிற செயல்களுக்கு இஸ்லாமிய சட்டங்களின் கோட்பாடுகளை பின்பற்றி நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 


Add new comment

Or log in with...