பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபா 10 இலட்சம் இழப்பீடு | தினகரன்

பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபா 10 இலட்சம் இழப்பீடு

(வைப்பக படம்)

 

தெவுந்தர கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் பலியான மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தீர்மானித்துள்ளது.

நேற்று முன்தினம் (09) இரவு தெவுந்தர கடற்பரப்பில், பல்தேவை படகு ஒன்றும் கப்பல் ஒன்றுடன் மோதியதில் இடம்பெற்ற குறித்த விபத்தில், பலியான இரு மீனவர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ 10 இலட்சம் வீதம் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மீனவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக விசேட புலமைப்பரிசில் உதவிகளும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...