திருப்பதியை இழிவுபடுத்தியதாக கனிமொழி எம்பி மீது புகார் | தினகரன்

திருப்பதியை இழிவுபடுத்தியதாக கனிமொழி எம்பி மீது புகார்

திருப்பதி கோயிலை இழிவுபடுத்திவிட்டதாக கனிமொழி எம்பி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரமாணிக்கம் சிவா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

திருச்சியில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் பேசிய கனிமொழி எம்பி, ‘திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இருந்தால் எதற்கு காவல்’ எனக் கூறியுள்ளார். இது 150 கோடி இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிரானது. ஒரு பொறுப்புள்ள எம்பி இப்படி கருத்து தெரிவிக்கக் கூடாது. இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ள கனிமொழியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது


Add new comment

Or log in with...