Friday, March 29, 2024
Home » வளர்ந்து வரும் மடவளை அல் முனவ்வரா றகர் அணி

வளர்ந்து வரும் மடவளை அல் முனவ்வரா றகர் அணி

அக்குறணை குறூப் நிருபர்

by gayan
November 4, 2023 2:23 pm 0 comment

வளர்ந்து வரும் கண்டி, மடவளை பஸார் அல் முனவ்வரா கனிஷ்ட வித்தியாலய றகர் அணி அண்மையில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது.

ரிட்ஸ்பெரி கனிஷ்ட றகர் போட்டி மற்றும் கண்காட்சிப் போட்டிகள் அண்மையில் கண்டி போகம்பறை மைதானத்தில் இடம் பெற்றது. அதில் முதல் முதலாக அறிமுகமான மடவளை அல் முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தின் 10 வயதின் கீழான றகர் அணி பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தியது.

முதலாவது இடம் பெற்ற கொழும்பு புரமோசனல் பவுண்டேசன் றகர் பயிற்சிப்பாடசாலை அணியுடனான போட்டியில் 5–0 என்ற அடிப்படையிலும் கொழும்பு பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு எதிராக 25–5 என்ற அடிப்படையிலும், கொழும்பு சாஹிரா கல்லூரிக்கு எதிராக 10–10 என்ற அடிப்படையிலும், கண்டி தர்மராஜா கல்லூரியிடனான போட்டியில் 20–0 என்ற அடிப்படையிலும் புள்ளிகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT