சீருடை வவுச்சர் செல்லுபடியாகும் காலம் ஜன. 30 வரை நீடிப்பு | தினகரன்

சீருடை வவுச்சர் செல்லுபடியாகும் காலம் ஜன. 30 வரை நீடிப்பு

 

அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் ஜனவரி 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில காரணங்களால் வவுச்சர்களைப் பெற முடியாமல் போன மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் அறிவுறுத்தலுக்கு அமைய, சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை இவ்வாறு நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வவுச்சர்கள் கடந்த டிசம்பர் 31 ம் திகதியுடன் காலவதியாகும் நிலையில், அதன் செல்லுபடியாகும் கால எல்லை இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

 


Add new comment

Or log in with...