ஈரானில் முதன் நிலை மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க தடை | தினகரன்

ஈரானில் முதன் நிலை மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க தடை


மேற்கத்திய கலாசாரத்தை தடுப்பதற்காக ஈரானில் ஆரம்பநிலை பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ஈரான் நாட்டின் பள்ளிகளில் தற்போது ஆங்கிலம் மொழி கற்றுத்தரப்படுகிறது. இந்த நிலையில் ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதற்கான உத்தரவை ஈரான் உயர்நிலைக் கவுன்சில் பிறப்பித்துள்ளது.

இத்தகவலை கல்வித்துறை உயர் அதிகாரி மெக்தி நவீத் அத்காம் தெரிவித்துள்ளார்.

ஆரம்பப்பள்ளியிலேயே குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்படுவதால் குழந்தைகள் மேற்கத்திய கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர். அதனால் ஈரானிய கலாசாரம் படிப்படியாக குறைந்து வருகின்றமையை தடுக்க ஈரானிய கலாசாரத்தை குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் பள்ளியில் படிக்கும் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்றுத்தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...