OIC இற்கு அச்சுறுத்தல்; JVP மாகாண சபை உறுப்பினர் கைது | தினகரன்

OIC இற்கு அச்சுறுத்தல்; JVP மாகாண சபை உறுப்பினர் கைது

 

மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (04) இரவு சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த, பதில் நிலையப் பொறுப்பதிகாரியை திட்டி, அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெய்யன்துடுவ, கொடெல்லவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு தெரிவித்து, நேற்று (04) இரவு குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அவரது கோரிக்கையை பதில் நிலையப் பொறுப்பதிகாரி மறுத்துள்ளார்.

இதனையடுத்து, அவரை திட்டியதோடு, அச்சுறுத்தல் விடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான மாகாண சபை உறுப்பினரை இன்று (05) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


Add new comment

Or log in with...