சட்டவிரோதமாக விற்பனை செய்த புகையிலை பொருட்கள் மீட்பு | தினகரன்

சட்டவிரோதமாக விற்பனை செய்த புகையிலை பொருட்கள் மீட்பு

வவுனியாவில் சுற்றி வளைப்பு

வவுனியாவில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வவுனியா மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரு வர்த்தக நிலையங்களிலும் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 14 இலட்சம் ரூபா பெறுமதியான புகையிலை தயாரிப்புகள் கைப்பற்றப்பட்டதாகவும் விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா மதுவரி திணைக்கள் அத்தியட்சகர் எஸ். செந்தூர்செல்வன் தெரிவித்தார்.

புகையிலை தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நபர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வுற்பத்தி பொருட்கள் இலங்கையில் பிரபல புகையிலை தயாரிப்பு நிறுவனத்தில் சின்னங்கள், பெயரை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

வவுனியா விசேட நிருபர் 


Add new comment

Or log in with...