3 நாட்களாக தேடப்பட்ட இளைஞன், காயங்களுடன் கிணற்றில் சடலமாக | தினகரன்


3 நாட்களாக தேடப்பட்ட இளைஞன், காயங்களுடன் கிணற்றில் சடலமாக

- சண்டிலிப்பாயில் சம்பவம்

கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் இன்று (04) சங்குவேலி வயல் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது சடலத்தில் தாக்கப்பட்ட காயங்கள் காணப்படுகின்றதோடு, குறித்த இளைஞன், கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்தவர், சண்டிலிப்பாயைச் சேரந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு எனும் 20 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கூலி வேலைக்குச் செல்லும் குறித் இளைஞனை, நேற்று முன்தினம் (02) முதல் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...