பிணையில் சென்ற இரட்டை கொலை சந்தேகநபர் மீது சூடு | தினகரன்

பிணையில் சென்ற இரட்டை கொலை சந்தேகநபர் மீது சூடு

 

பன்னல பிரதேசத்தின் பல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் ஜீப் வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இரட்டை கொலை சம்பவ வழக்கு தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த, அமில பிரதீப் குமார (35) எனும் நபர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

குறித்த கொலைக்கான காரணம் இது வரை அறியப்படவில்லை என்பதோடு, கொலையை புரிந்த சந்தேகநபர் தொடர்பிலும் இது வரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பன்னல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...