ஆசிய அணிகள் வெற்றி பெறாத கேப்டவுன் மைதானம் | தினகரன்

ஆசிய அணிகள் வெற்றி பெறாத கேப்டவுன் மைதானம்

தென்ஆபிரிக்கவில் உள்ள கேப்டவுன் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றது கிடையாது.

கேப்டவுன் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது.

இந்திய அணி இங்கு 4 டெஸ்டில் விளையாடி 2-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. மற்ற ஆசிய அணிகளான இலங்கை இங்கு விளையாடிய 3 டெஸ்டிலும், பாகிஸ்தான் 4 டெஸ்டிலும் தோல்வியையே சந்தித்து இருக்கிறது.

தென்ஆபிரிக்க அணி இங்கு இதுவரை 54 டெஸ்டில் பங்கேற்று 23-ல் வெற்றியும், 20-ல் தோல்வியும் கண்டுள்ளது.

எஞ்சிய 11 போட்டிகள் டிராவில் முடிந்தது.

இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இங்கு 2 சதங்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...