கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பொதுமக்களின் முன்னிலையில் அழிக்க ஏற்பாடு | தினகரன்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பொதுமக்களின் முன்னிலையில் அழிக்க ஏற்பாடு

கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை பொதுமக்கள் முன்னிலையிலேயே அழிப்பதற்கு தேவையான சட்டங்களை அரசாங்கம் தற்பொழுது தயாரித்து வருவதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை நீதிமன்ற உத்தரவின் பின் அழிக்கும் வரை பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தி வைத்தபோதிலும் கடந்த காலம் முழுவதிலும் அப்போதைப்பொருட்கள் மீண்டும் மோசடிக்காரர்களின் கைகளுக்கு கிடைப்பதாக வதந்திகள் பரவின.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை பொதுமக்கள் முன்னிலையிலேயே அழிப்பதற்கு தேவையான சட்டங்களை தயாரித்து வருவதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதி முதல் டிசம்பர் இறுதி வரையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் மூலம் 3755,0686,437 ரூபா பெறுமதியான ஹெரோயின், சட்டவிரோத புகையிலை, மதுபானம், கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் போதைப்பொருள் மற்றும் பாரதூரமான குற்றங்களை தடுக்கும் பிரிவினரும் கைப்பற்றியுள்ளனர்.

இதுதவிர, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சுங்கம், கடற்படை, வலானை அவசர சுற்றிவளைப்பு பிரிவு உள்ளிட்ட ஏனைய பாதுகாப்பு பிரிவுகளாலும் இதுபோன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 


Add new comment

Or log in with...