ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு அழைப்பாணை | தினகரன்

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு அழைப்பாணை

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் விசாரனைக்கு நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அரச மருத்துவர் பாலாஜி 2வது முறையாக விசாரணை ஆணையத்தில் ஜனவரி 11ம் திகதி ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர் சிவக்குமார் 8ம் திகதி ஆஜராகிறார். பூங்குன்றன் 9ம் திகதி ஆஜராகிறார். பெருமாள்சாமி 10ம் திகதி ஆஜராகிறார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பின்போது சிகிச்சையளித்த சாமிநாதன் 12ம் திகதி ஆஜராகிறார். 


Add new comment

Or log in with...