லேக் ஹவுஸ் அருகில் விபத்து; ஒருவர் பலி | தினகரன்

லேக் ஹவுஸ் அருகில் விபத்து; ஒருவர் பலி

 

லேக் ஹவுஸ் ஊழியர் ஒருவர் படுகாயம்

டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில், லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று (04) காலை கோட்டை புகையிரத நிலையத்தின் டி.ஆர். விஜேவர்தன நுழைவாயிலில் இடம்பெற்ற குறித்த விபத்தில் லேக் ஹவுஸ் ஊழியர் ஒருவர் படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழங்களை ஏற்றி வந்த லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையின் அருகிலிருந்த தூண் ஒன்றின் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வந்த இருவர் குறித்த லொறியில் சிக்குண்டு காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதோடு, மற்றைய நபரான லேக் ஹவுஸ் ஊழியர் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

Add new comment

Or log in with...