Thursday, April 25, 2024
Home » கொழும்பில் 10 மணித்தியால நீர் விநியோகத் தடை

கொழும்பில் 10 மணித்தியால நீர் விநியோகத் தடை

- கொழும்பு 11, 12, 13, 14,15 ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு

by Prashahini
November 3, 2023 9:21 am 0 comment

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (04) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் நாளை (04) பி.ப. 7.00 மணி முதல் மறுநாள் (05) அதிகாலை 5.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனவும் சபை தெரிவித்துள்ளது.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு 01 – 15 பெயர்கள் (Colombo 01 – 15 Names)

கொழும்பு 1 – கோட்டை
கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
கொழும்பு 5 – ஹெவ்லக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
கொழும்பு 8 – பொரளை
கொழும்பு 9 – தெமட்டகொட
கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 – புறக்கோட்டை
கொழும்பு 12 – புதுக்கடை, வாழைத்தோட்டம்
கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
கொழும்பு 15 – மோதறை/முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT