உள்ளூராட்சி தேர்தல் அரசுக்கு பெரும் சவாலாக அமையாது | தினகரன்

உள்ளூராட்சி தேர்தல் அரசுக்கு பெரும் சவாலாக அமையாது

 

உள்ளூராட்சி தேர்தல் அரசாங்கத்துக்கு எந்தவகையிலும் சவாலாக அமையாது. 2020 வரை நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியில் இருக்குமென ஸ்ரீல.சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. இம்முறை தேர்தலில் அரசாங்கம் அமோக வெற்றி பெறுவது உறுதியென்றும் அவர் தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு சில சக்திகள் பிரசாரம் செய்கின்றன. அவ்வாறு பிரசாரம் செய்பவர்களில் விரல் விட்டெண்ணக் கூடியவர்களே உள்ளூராட்சி சபைக்கு தெரிவு செய்யப்படுவர். அவர்களால் கிராமங்களை அபிவிருத்தி செய்யவோ மக்களுக்கு சேவை செய்யவோ முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கமே வெற்றி பெறும். அரசாங்கமே அனைத்து கிராமங்களையும் அபிவிருத்தி செய்யும், திட்டங்களை மேற்கொள்ளும். இதனை கருத்திற் கொண்டே இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்தத் தேர்தல் எந்த வகையிலும் அரசாங்கத்திற்கு சவாலாக அமையாது. அது அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம் 


There is 1 Comment

Pages

Add new comment

Or log in with...