Thursday, April 18, 2024
Home » SLPP யின் 07 ஆவது ஆண்டு நிறைவு இன்று

SLPP யின் 07 ஆவது ஆண்டு நிறைவு இன்று

by sachintha
November 3, 2023 6:27 am 0 comment

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 07ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு, கட்சியின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

கொழும்பு, நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை 03 மணிமுதல் 6.00 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகோதர கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரது பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT