Home » பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்றத்தின் பணிகள் புதுப்பொலிவுடன் மீண்டும் ஆரம்பம்

பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்றத்தின் பணிகள் புதுப்பொலிவுடன் மீண்டும் ஆரம்பம்

by sachintha
November 3, 2023 11:15 am 0 comment

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், பேரறிஞருமான அண்ணாவின் ஞாபகார்த்தமாக 1969. -03. -01ஆம் திகதி பாண்டிருப்பில் தோற்றம் பெற்றது அறிஞர் அண்ணா மன்றம் ஆகும். ஆரம்பகாலத்தில் தமிழ் மக்களோடு முஸ்லிம் மக்களும் இணைந்து இம்மன்றத்தின் ஊடாக பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வந்தனர். இம்மன்றம் அம்பாறை மாவட்டத்தில் அக்காலத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற அமைப்பாக இயங்கி வந்தது.

அக்காலத்தில் குடிசை வீடுகளுக்கு இலவசமாக கூரை மேய்தல், மரணவீடுகளுக்குச் சென்று மரணச் சடங்குகளைச் செய்வதற்கு உதவுதல், திருவிழாக் காலங்களில் ஆலயங்களுக்குச் சென்று தோரணங்கள் அமைத்தல், ஆலயங்களில் இலவசமாக கட்டுமானப் பணிகளைச் செய்தல் உள்ளிட்ட பல சமூக சேவைகளை இம்மன்றத்தினர் செய்து வந்தனர்.

மேலும் ஒவ்வொரு வருடமும் அன்னதானம் கொடுத்தல், இந்துசமய அறநெறிப் பணிகளைச் செய்தல் உள்ளிட்ட சமூகப்பணிகளிலும் அம்மன்றத்தினர் ஈடுபட்டு வந்தனர். சிறிது காலம் சென்ற பின்னர் பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்றம் தனது சமூகப்பணிகளை நிறுத்திக் கொண்டதுடன், அம்மன்றம் செயலிழந்து போனது.

சுனாமியின் பின்னர் நெக்டொப் திட்டத்திக் கீழ் பல்தேவைக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு தற்போது பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்றம் சிறப்பாக இயங்கி வருகின்றது. அண்ணா பாலர் பாடசாலை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

வி.தவராஜா தலைமையில் புதிய நிருவாகம் அமைக்கப்பட்டு மன்றம் புனரமைக்கப்பட்டு தனது பணிகளை மீண்டும் சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

முதல்பணியாக அண்மையில் அண்ணா மன்ற வளாகத்தில் இந்துசமய அறநெறி சமூகப் பணியை சிறப்பாக நடத்தியது. இந்த நிகழ்வில் வீ.தவராஜா, செயலாளர் அ.கமலநாதன், பொருளாளர் சா.நடேஸ், அறநெறி ஆசிரிய ஆலோசகர் எம். லக்குணம் ஆகியோருடன் அறநெறி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அறநெறிப் பாடசாலையில் தரம் ஒன்று, தரம் இரண்டு மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.இப்பாடசாலை பிரதி ஞாயிறு தோறும் இயங்கி வருகின்றது.

இம்மன்றத்தில் 31 உறுப்பினர்கள் இணைந்து இயங்கி வருகின்றனர்.

பி.எம்.எம்.ஏ.காதர்…

(மருதமுனை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT