சிறுமிக்குக் கரம் கொடுத்த ஜனாதிபதி | தினகரன்

சிறுமிக்குக் கரம் கொடுத்த ஜனாதிபதி

பொலன்னறுவை திம்புலாகல பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் கூட்டமொன்றில் பங்கேற்ற ஜனாதிபதியை அப்பிரதேச வேட்பாளர்கள், சு.க ஆதரவாளர்கள், கிராமமக்கள் உட்பட பலரும் சந்தித்து சுமுகமாக உரையாடினார்கள்.இவர்களுடன் 10 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி ஒருவரும் ஜனாதிபதியை சந்தித்தார்.

ஒரு கை இழந்த அந்த சிறுமி தனக்கு செயற்கை கையொன்றை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்விடுத்து மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தார்.

அவரின் கோரிக்கைக்கு அந்த நிமிடமே தீர்வு பெற்றுக் கொடுத்த ஜனாதிபதி தனது பிரத்தியேக மருத்துவருடன் தொடர்பு கொண்டு சிறுமியை கொழும்பிற்கு அழைத்து துரிதமாக சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். 


There is 1 Comment

v good maitheeriwdhsr

Pages

Add new comment

Or log in with...