தினேஷ், விமலின் கட்சி பிரமுகர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு | தினகரன்

தினேஷ், விமலின் கட்சி பிரமுகர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு


ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தினேஷ் குணவர்தன மற்றும் விமல் வீரவங்சவின் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

தினேஷ் குணவர்தன தலைமை வகிக்கும் மகஜன எக்சத் பெரமுண கட்சியின் உப தலைவர் சோமவீர சந்திரசிறி மற்றும் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் நிமல் பிரேமவங்ச ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

சோமவீர சந்திரசிறி - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இன்று (28) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்த அவர்கள் இருவரும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஸ்ரீ.ல.சு.க. யின் வெற்றிக்காக பாடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.

நிமல் பிரேமவங்ச - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நிமல் பிரேமவங்ச தேசிய சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளராகவும் அக்கட்சியின் அரசியல் பிரிவு பிரதி செயலாளராகவும் செயற்பட்டு வந்ததோடு, சோமவீர சந்திரசிறி மகஜன எக்சத் பெரமுண கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...