போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது; ரூ. 2 1/2 கோடி பெறுமதி | தினகரன்

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது; ரூ. 2 1/2 கோடி பெறுமதி

 

 

சட்டவிரோதமான 7,800 போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 24 மற்றும் 25 வயதுடைய வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (22) காலை, மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, கிரிபத்கொடை நகர மண்டபத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'யாபா' என்று அழைக்கப்படும் இந்த போதைப்பொருள் மாத்திரை ஒன்றின் விலை ரூபா 3,000 மதிப்புடையது எனவும், கைப்பற்றப்பட்ட 7,800 மாத்திரைகளுக்கும் சுமார் ரூபா 2.5 கோடி (ரூபா 250 மில்லியன்) பெறுமதியாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு தொகை மதுபானங்கள், அவற்றை கொண்டு சென்ற வேன் ஒன்றுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...