Friday, March 29, 2024
Home » தனது இயக்கத்திறன் வணிகத்திற்கு புதிய தலைமை அதிகாரியாக கௌஷல்யா குணரத்னவை நியமித்துள்ள Uber

தனது இயக்கத்திறன் வணிகத்திற்கு புதிய தலைமை அதிகாரியாக கௌஷல்யா குணரத்னவை நியமித்துள்ள Uber

by Rizwan Segu Mohideen
November 2, 2023 11:29 am 0 comment

முன்னணி சவாரிப் பகிர்வு செயலியான Uber ஆனது Uber – Sri Lanka வின் இலங்கைக்கான புதிய தலைமை அதிகாரியாக கௌஷல்யா குணரத்ன அவர்களை நியமித்துள்ளமை தொடர்பில் இன்று அறிவித்துள்ளது. வணிகத்தின் தலைமை அதிகாரியான, அவர் தனது பணிப்பொறுப்பின் கீழ் நாட்டில் Uber இன் இயக்கத்திறன் சார்ந்த வணிகத் தொழிற்பாடுகளுக்கு பொறுப்பு வகிப்பார்.

Uber Eats வணிகத்தில் வணிகர் தொழிற்பாடுகளுக்கு தலைமை வகித்த கௌஷல்யா அவர்கள் தற்போது இந்த அறிவிப்பையடுத்து, நகர்ப்புற இயங்குதிறன் தீர்வுகளை வழங்குவதற்காக Uber Rides வணிகப் பிரிவுக்கு பொறுப்பு வகிப்பார். கௌஷல்யா அவர்கள் தனது முந்தைய பணிப்பொறுப்பில் Uber Eats இன் வணிகர் வலையமைப்பை வலுப்படுத்தி, வருமான வளர்ச்சிக்கான மூலோபாயங்களை வகுத்துள்ளதுடன், உள்நாட்டுத் தொழிற்பாடுகளுக்கு ஆதரவாக, சர்வதேச மற்றும் பிராந்திய அணிகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டுள்ளார்.

Uber இல் இணைந்து கொள்வதற்கு முன்பதாக, ஆடைத் தொழிற்துறையில் பணியாற்றியுள்ள அவர், முன்னணி சர்வதேச வர்த்தகநாமங்களுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு, ஆழமான மற்றும் பரந்துபட்ட அனுபவத்தைப் பெற்றுள்ளார். வணிக மேம்பாடு, மூலோபாயம் மற்றும் திட்டமிடல், வழங்கல் சங்கிலி முகாமைத்துவம் மற்றும் நிதி அடங்கலாக பல்வேறு துறைகளில் அவர் பணிப்பொறுப்புக்களை வகித்துள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் Uber India & South Asia வின் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளரான ஷிவா ஷைலேந்திரன் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் Uber இற்கு தலைமை தாங்கி, அதனை மேலும் வளர்ச்சி பெறச் செய்வதற்கு கௌஷல்யா அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். Uber இல் அவர் பணியாற்றியுள்ள காலத்தில், மிகச் சிறந்த வகையில் ஒத்துழைத்து பணியாற்றுபவராகவும், சாமர்த்தியமான திட்டமிடலாளராகவும் மற்றும் வளர்ச்சியில் கண்வைத்தவாறு வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களை பூரிப்பில் ஆழ்த்துவதில் கவனம் செலுத்துபவராகவும் கௌஷல்யா தன்னை நிரூபித்துள்ளார். நிறுவனத்தினுள் ஊழியர்கள் தமது தொழில் வாழ்வில் வளர்ச்சி காண்பதற்கு வாய்ப்புக்களை வழங்குவதில் Uber காண்பிக்கின்ற அர்ப்பணிப்பை இந்த நியமனம் வெளிப்படுத்துகின்றது. அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் நாம் கால்பதித்த காலம் முதலாக அபரிமிதமான அபிமானத்தைச் சம்பாதித்துள்ள ஒரு வர்த்தகநாமத்தை மேலும் கட்டியெழுப்புவதை அவர் மகிழ்வுடன் முன்னெடுப்பார் என உறுதியாக நம்புகின்றேன்,” என்று குறிப்பிட்டார்.

Uber Sri Lanka வின் இலங்கைக்கான முகாமையாளரான கௌஷல்யா குணரத்ன அவர்கள் இது தொடர்பில் தனது கருத்தை பகிர்ந்து கொள்கையில், “இப்புதிய பொறுப்பை ஏற்று, Uber இயக்கத்திறன் வணிகத்தை இலங்கையில் வளர்ச்சியின் அடுத்து கட்டத்திற்கு கொண்டு செல்வதில் அங்கம் வகிப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நீண்டகால நெருக்கடிக்குப் பின்னர் மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளை எமது நாடு எதிர்பார்த்துள்ளது. எம்முடன் சவாரி செய்பவர்கள் மற்றும் ஓட்டுனர் கூட்டாளர்களுக்கு ஒவ்வொரு சவாரியும் முன்னரை விடவும் மறக்க முடியாத தருணமாக அமையச் செய்வதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இயக்கத்திறன் அணியுடன் ஒன்றாக உழைத்து, எமது அழகிய நாட்டிற்கு Uber இன் மிகச் சிறந்த சேவைகளையும், தீர்வுகளையும் தொடர்ந்து வழங்க ஆவலாக உள்ளேன்,” என்று குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இலங்கையில் முன்னணி சவாரிப் பகிர்வுத் தளமாக Uber வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது இலங்கையில் 40 நகரங்களில் சவாரிச் சேவைகளை Uber வழங்குவதுடன், பல்லாயிரக்கணக்கான ஓட்டுனர் கூட்டாளர்களுக்கு உழைப்பதற்கான வாய்ப்புக்களை வெளிக்கொண்டு வந்து, சவாரி செய்பவர்களுக்கு பிரயாணத்தை சௌகரியமானதாகவும், சிரமங்களற்றதாகவும் மாற்றியுள்ளது. அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் கைகோர்த்துள்ள Uber, விமான நிலையத்தில் பிரயாணம் மற்றும் காத்திருப்பு தொடர்பாக கடந்தகாலங்களில் காணப்பட்ட தேவையற்ற மன அழுத்தங்களைப் போக்கி, சவாரி செய்கின்றவர்களுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே வண்டியில் ஏறிக் கொள்ளும் வசதியை ஆரம்பித்துள்ளது.

Uber பற்றி
ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பிரயாணிப்பதனூடாக வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதே Uber இன் குறிக்கோள். பொத்தான் ஒன்றை இலகுவாகத் அழுத்துவதன் மூலமாக சவாரி ஒன்றை எவ்வாறு இலகுவாக மேற்கொள்வது என்ற ஒரு எளிமையான பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக 2010 ஆம் ஆண்டில் நாம் தொழிற்பட ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து 25 பில்லியனுக்கும் மேற்பட்ட சவாரிகளுடன், உற்பத்திகளை அவை எட்ட விரும்புகின்ற நுகர்வோருக்கு நெருக்கமாக அவற்றைக் கொண்டு சென்று சேர்ப்பிக்கின்றது. மக்கள் எவ்வாறு உணவுத் தெரிவுகளை மேற்கொள்கிறார்கள் மற்றும் நகரங்களில் பிரயாணம் செய்கின்றார்கள் என்பதை புரட்சிகரமான வழியில் மாற்றியமைத்து, புதிய வாய்ப்புக்களுக்கான உலகிற்கு Uber வழிகோலுகின்றது. 2015 ஆம் ஆண்டு இலங்கையில் செயல்பட ஆரம்பித்ததிலிருந்து இலங்கையில் 40 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு Uber Rides சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் இணைந்த ஏனைய சேவைகளுடன் மேம்பட்ட அனுபவத்தையும் தனது தளத்தினூடாக வழங்குகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT