தமிழ் முற்போக்கு கூட்டணி ஏணியிலும் யானையிலும் போட்டி

உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி யானை சின்னத்திலும் ஒருமித்த தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​​​ கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐ.தே.கவுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொண்ட மாவட்டங்களில் ஐ.தே.கவுடன் இணைந்து யானை சின்னத்திலும் ஏனைய பகுதிகளில் ஒருமித்த முற்​போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்திலும் போட்டியிடவுள்ளது என்று தெரிவித்த அவர், தமிழ் முற்போக்கு கூட்டணி, கொழும்பு, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கொழும்பு, மாத்தளை,இரத்தினபுரி, கண்டி மாவட்டத்தில் சில இடங்களில் யானை சின்னத்திலும் சில இடங்களில் ஏணி சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நுவரெலியா மாவட்டத்திலும் ஏணி சின்னத்தின் கீழ் ஒருமித்த முற்​போக்கு கூட்டணி என்ற பெயரில் போட்டியிடவுள்ளதாகவும் ஏனைய இடங்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையின் மேயர் பதவிக்கு ஒருமித்த முற்போக்கு முன்னணி சார்பில் யார் களமிறங்குவது என்பது தொடர்பில் இன்று அறிந்துக்கொள்ளலாம் எனவும் எந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிடப்போகிறோம் என்பது முக்கியமானதல்ல. நோக்கமும் எண்ணமும்தான் முக்கியம். என்றும் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

 


Add new comment

Or log in with...