அடையாள அட்டை மோசடி; O/L எழுதியவர் தொடர்பில் விசாரணை | தினகரன்


அடையாள அட்டை மோசடி; O/L எழுதியவர் தொடர்பில் விசாரணை

 

2017 க.பொ.த. (சா/த) பரீட்சை இன்றுடன் நிறைவு

தேசிய அடையாள அட்டையை போலியாக தயாரித்து க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதியதாக தெரிவிக்கப்படும் தனிப்பட்ட பரீட்சார்த்தி தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிலியந்தலை பிரதேசத்திலுள்ள பரீட்சை மத்தியநிலையம் ஒன்றில், பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்தி ஒருவர், தனது தேசிய அடையாள அட்டையில் மற்றுமொருவரின் புகைப்படத்தை ஒட்டி போலியாக தயாரித்து, பரீட்சார்த்திக்கு பதிலாக புகைப்படத்திலுள்ளவர் மூலம் பரீட்சை எழுதியாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைக்கு தோற்றிய உடவளவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞன் மற்றும் பிலியந்தலை - கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது பரீட்சார்த்தி ஆகிய இருவரையும் பிலியந்தலை பொலிசார் கைது செய்துள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண பரீட்சை கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் (21) நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...