தேயிலையின் பெயரில் 542 கிலோ போதைப்பொருள் மீட்பு | தினகரன்

தேயிலையின் பெயரில் 542 கிலோ போதைப்பொருள் மீட்பு

 

- பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

சம்பியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, கிறீன் ரீ (Green Tea) எனும் பெயரில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு மீள் ஏற்றுமதிக்காக தயார்படுத்தப்பட்டிருந்த போதைப்பொருள் மூலிகை வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

542 கிலோ கிராம் எடையுள்ள குறித்த போதைப்பொருள், கொழும்பு நாகலகம்வீதிய பகுதியில் வைத்து கைப்பற்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (20), பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே குறித்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்பில் களனி மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (31) பெண் ஒருவரும் (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்றைய தினம் (21) மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த போதைப்பொருள் வகை மூலிகைகள் சம்பியா நாட்டில் வளரக்கூடியவை என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளன.

 


Add new comment

Or log in with...