ஜெயலலிதா வைத்தியசாலையில் வீடியோ வெளியானது! (VIDEO) | தினகரன்

ஜெயலலிதா வைத்தியசாலையில் வீடியோ வெளியானது! (VIDEO)

தமிழகத்தில் பரபரப்பு

அப்பலோ மருத்துவமனையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5ஆம் திகதி உயிரிழந்தார். இவரது இறப்பில் மர்மம் இறப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 20 நொடிகள் ஓடக்கூடிய அந்த காட்சியில், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவை தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் என்பவர் வெளியிட்டுள்ளார். இன்று ஆர்கே நகர் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


Add new comment

Or log in with...