சு.க தலைமையை ஏற்கக் கோரினால் மறுக்குமளவு நான் அறிவிலியல்ல | தினகரன்

சு.க தலைமையை ஏற்கக் கோரினால் மறுக்குமளவு நான் அறிவிலியல்ல

லங்கா சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை ஏற்குமாறு யாரும் தன்னை கோரவுமில்லை தான் அதனை நிராகரிக்குமளவு அறிவில்லாதவனல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

களுத்துறை நகர சபை ஐ.தே.க உறுப்பினர் லசித் பெரேரா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டார். அவர் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பொதுஜன முன்னணியுடன் இணைந்தார். இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே மஹிந்த ராஜபக்‌ஷ இதனை தெரிவித்தார்.

சு.க -ஒன்றிணைந்த எதிரணி பேச்சின் போது உங்களுக்கு சு.க தலைவர் பதவியை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டதா என ஊடகவியலாளர்கள் வினவினர். இதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி; அவ்வாறு எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை. அது வெறும் கட்டுக் கதை. கட்சி தலைவர் பதவியை வழங்க யோசனை முன்வைக்கு மளவிற்கு மைத்திரிபால சிறிசேன முட்டாளல்ல. அவ்வாறு யோசனை கிடைத்தால் அதனை நிராகரிக்குமளவு நானும் அறிவில்லாதவனல்ல. அவ்வாறு யாராவது யோசனை முன்வைத்தால் ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.

தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் தேர்தலில் பொதுஜனமுன்னணி பெரு வெற்றியீட்டும்.வேட்பு மனு தாக்கலில் சில தவறுகள் ஏற்பட்டன. அவற்றை திருத்தி வேட்பு மனுக்களை சமர்ப்பித்து வருகிறோம் என்றார். (பா) 


There is 1 Comment

KALLAN ARASIYAL ELLADI PUNAM

Pages

Add new comment

Or log in with...