உள்ளூராட்சி தேர்தலை பெப். 10 இல் நடாத்த தீர்மானம் | தினகரன்

உள்ளூராட்சி தேர்தலை பெப். 10 இல் நடாத்த தீர்மானம்

 

உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடாத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

இன்று (18) கொழும்பின் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்தார்.

பெப்ரவரி 7,8,10,12 ஆகிய நான்கு திகதிகளில் ஒன்றை தெரிவு செய்யும்  அடிப்படையில் பெப்ரவரி 10 ஆம் திகதி சனிக்கிழமை தினத்தில் தேர்தலை நடாத்த தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலை நடாத்தும் குறித்த தினம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்த முடிவினை எடுத்துள்ளதாக அவர் இதன்போது அறிவித்தார்.

அதற்கமைய தேர்தல் நடாத்தப்படும் திகதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான அறிவித்தலை எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி, வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...