248 சபைகளுக்கான வேட்புமனு கோரல் இன்று ஆரம்பம் | தினகரன்

248 சபைகளுக்கான வேட்புமனு கோரல் இன்று ஆரம்பம்

 

மேலும் 248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக் கோரல் இன்று (18) முதல் ஆரம்பமாகிறது.

மாநகர சபைகள் 17, நகர சபைகள் 23 மற்றும் 208 பிரதேச சபைகளுக்கே இவ்வாறு வேட்புமனு கோரப்பட்டுள்ளது.

குறித்த 248 சபைகளுக்குமான கட்டுப்பணத்தை நாளை மறுதினம் (20) வரை செலுத்தலாம் என்பதோடு, எதிர்வரும் வியாழக்கிழமை (21) நண்பகல் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்துமாறு, அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை முதற்கட்டமாக இடம்பெற்ற 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரல் கடந்த திங்கட்கிழமை (11) ஆரம்பமாகி வியாழக்கிழமை (14) நண்பகல் நிறைவடைந்தது.

இதில் அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சிகள் 466 மற்றும் சுயாதீன குழுக்கள் 57 ஆகியன வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்ததோடு, அதில் 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அனைத்து இடங்களிலும் அதற்கு உதவும் வகையிலான சேவையொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து கவனம் செலுத்தி, வேட்புமனுக்களை தயாரிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...