ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 141 ஓட்டங்களால் வெற்றி | தினகரன்

ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 141 ஓட்டங்களால் வெற்றி

 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 141 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

சண்டிகாரில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணித் தலைவர் ரோஹிட் சர்மா தமது மூன்றாவது இரட்டைச் சதத்தை பெற்றார்.

அவர் ஆட்டமிழக்காமல் 208 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதையடுத்து, 393 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களைப் பெற்றக்கொடுத்தார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால்  மூன்று விக்கட்டுக்களையும் ஜெஸ்பிரிட் பும்ரா இரண்டு விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவானார்.

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...