அதிக விலைக்கு தேங்காய் விற்றவருக்கு அபராதம் | தினகரன்

அதிக விலைக்கு தேங்காய் விற்றவருக்கு அபராதம்

 

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் திருகோணமலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சோதனையின் போது கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலாக விற்றமை, விலையில்லாமல் பொருட்கள் விற்றமை, விலையைக் காட்சிப்படுத்தாமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் எட்டு கடை உரிமையாளருக்கெதிராக (12) மூதூர் நீதவான் நீதி மன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

இவர்களுள் தேங்காயின் கட்டுப்பாட்டு விலையான 75 ரூபாயை விட 110 ரூபாவிற்கு விற்ற கடை உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டு பதில் நீதவான் இல்லியாஸ் முபாரீஸ் அவர்களால் ரூபா 1,500 அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

(தோப்பூர் குறூப் நிருபர் - எம்.எம். நௌபீக்)

 


Add new comment

Or log in with...