புகையிரத சேவையின் மற்றுமொரு குழுவினர் பணி புறக்கணிப்பில் | தினகரன்

புகையிரத சேவையின் மற்றுமொரு குழுவினர் பணி புறக்கணிப்பில்

 

  • சேவைகளுக்கு இடைஞ்சல் இல்லை

நேற்று (13) நிறைவடைந்த வேலைநிறுத்தத்தில் பங்குபற்றாத, புகையிரத சேவையில் பல்வேறு தங்களிலுள்ள புகையிரத ஒன்றிணைந்த கூட்டணி ஊழியர் தொழிற்சங்ம் இன்று (14) பணி புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.

ஆயினும், புகையிரத சேவை நடவடிக்கைகள் இன்று (14) வழமைபோன்று இடம்பெறும் என புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நண்பகல் வரை வழமையாக இடம்பெறும் அனைத்து ரயில் சேவைகளும் இடம்பெற்றதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று இரவு ஒரு தபால் சேவை இடம்பெற்றதாகவும், இன்றைய தினம் அனைத்து சேவைகளும் உரிய நேரத்திற்கு இயங்கும் எனவும் புகையிரத எஞ்சின் சாரதிகளின் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து, புகையிரத ஊழியர்கள் கடந்த வாரம் (07) தங்களது பணி புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்ததோடு, பல கட்டங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நேற்றைய தினம் (13) குறித்த பணி புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

புகையிரத சேவை பணியாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான பரிந்துரையை, எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக, வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய குறித்த போராட்டத்தை கைவிடுவதற்கு, தொழிற்சங்கங்கள் இணங்கியிருந்ததை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், புகையிரதம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய பிரிவு சேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்ட தனியான சேவைகளாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நேற்றைய தினம் (13) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...