பொதுஜன பெரமுண கட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு (UPDATE) | தினகரன்

பொதுஜன பெரமுண கட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு (UPDATE)

பொதுஜன முன்னணியின் மேலும் சில உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பதுளை மாவட்டத்தின் பதுளை பிரதேச சபை, மற்றும் மஹியங்கணை பிரதேச சபைக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.

அதில் ஒன்றில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு, மற்றையதில் வேட்பாளர்களின் கையொப்பம் இடப்பட்டுள்ளபோதிலும் பெயர் குறிப்பிடப்படவில்லை போன்ற காரணங்களால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று பாணந்துறை நகரசபை மற்றும் அகலவத்தை பிரதேச சபை தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி தாக்கல் செய்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.

அந்த வகையில் அக்கட்சியின் 6 சபைகளுக்கான வேட்புமனுக்கள் இது வரை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.


 


ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி (பொதுஜன பெரமுண) கட்சியின் இரு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வெலிகம நகர சபை மற்றும் மஹரகம நகர சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கு, மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியினரின் மலர் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன முன்னணியின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.

வெலிகம நகர சபை தொடர்பில், குறித்த சார்பில் பெயரிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் உரிய வேட்புமனு தாக்கல் செய்யப்படாததால் குறித்த நகர சபையின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமது கட்சி நீதிமன்றிற்கு செல்லத் தயாராவதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மஹரகம நகர சபைக்காக முன்வைக்கப்பட்ட வேட்புமனுவில், பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருக்காமை காரணமாக அது நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.

 

 


Add new comment

Or log in with...