அடுத்தடுத்து ‘ஹிட் விக்கெட்’ மேற்கிந்திய வீரர் சாதனை | தினகரன்

அடுத்தடுத்து ‘ஹிட் விக்கெட்’ மேற்கிந்திய வீரர் சாதனை

தொடர்ந்து இரண்டு டெஸ்டில் அடுத்தடுத்து ‘ஹிட்அவுட்’ ஆகி மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்ட வீரர் சுனில் அம்ப்ரிஸ் மோசமான சாதனைப் படைத்துள்ளார்.

நியூசிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் மேற்கிந்திய அணி வீரர் சுனில் அம்ப்ரிஸ் அறிமுகமானார். வோக்னெர் வீசிய பந்தை முதன்முறையாக எதிர்கொண்டார். முதல் பந்தை பின்னால் நகர்ந்து தடுத்தாடினார். அப்போது அவரது கால் ஸ்டம்ப் மீது பட்டது. இதனால் ஹிட் விக்கெட் மூலம் வெளியேறினார். அறிமுக போட்டியில் ‘ஹிட்’ விக்கெட் மூலம் கோல்டன் ‘டக்அவுட்’ ஆனார்.

இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் ஹமில்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ட்ரென்ட் போல்ட் பந்தை சந்தித்தார்.

இதிலும் பவுன்சராக வீசிய பந்தை பின்னால் சென்று தடுத்தாடினார். அப்போது வலது கால் ஸ்டம்பில் பட்டு ‘ஹிட்அவுட்’ ஆனார்.

இதனால் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டியில் ஹிட்அவுட் மூலம் வெளியேறிய முதல் வீரர் என்ற மோசமான சாதனைக்கு சுனில் அம்ப்ரிஸ் சொந்தக்காரராகியுள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் டேனிஸ் காம்ப்டன் 5 முறை ஹிட்அவுட் மூலம் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். 


Add new comment

Or log in with...