அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் 37 பெண்களுக்கு வாய்ப்பு | தினகரன்

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் 37 பெண்களுக்கு வாய்ப்பு


அம்பாறையில் 98 பெண்களுக்கு வாப்பு

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட, 37 பெண் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு காணப்படுகின்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 08 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு, இம்முறை மொத்தமாக 37 பெண் உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டியுள்ளது.

ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்குமான உறுப்பினர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென, உள்ளூராட்சி திருத்தச் சட்டம் வலியுறுத்துகின்றமைக்கு இணங்க, மேற்படி 08 சபைகளிலும் 37 பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளனர்.

இதற்கிணங்க  கல்முனை மாநகர சபையில் 10, அக்கரைப்பற்று மாநகர சபையில் 05, சம்மாந்துறை பிரதேச சபையில் 05, இறக்காமம் பிரதேச சபையில் 03, அக்கரைப்பற்று பிரதேச சபையில் 02, பொத்துவில் பிரதேச சபையில் 05, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 04, நிந்தவூர் பிரதேச சபையில் 03 எனும் கணக்கில் பெண் உறுப்பினர்கள், நியமிக்கப்பட வேண்டும்.

இதேவேளை, ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் போட்டியிடும் பொருட்டு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சமர்ப்பிக்கும் வேட்பாளர் பட்டியலிலும்,  25 வீதமானவர்கள் பெண் வேட்பாளர்களாக இருத்தல் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை...

(ஒலுவில் மத்திய விசேட நிருபர் - ஏ.சி. றிசாத்)

 


Add new comment

Or log in with...