1st ODI: SLvIND; இலங்கை அணி அபார வெற்றி (UPDATE) | தினகரன்

1st ODI: SLvIND; இலங்கை அணி அபார வெற்றி (UPDATE)

 

இன்று (10) இடம்பெற்ற சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அணியின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறியது.

அந்த வகையில் ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து 29 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

அதனை அடுத்து களமிறங்கிய மஹேந்திர சிங் தோனி, மிக சிறப்பாக துடுப்பெடுத்தாடி 65 ஓட்டங்களை பெற்று கொடுத்ததன் மூலம் இந்திய அணியை 112 எனும் ஓட்ட இலக்கிற்கு வழிநடத்திச் சென்றார்.

இந்திய அணி, 38.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இருந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மிகச் சிறப்பாக பந்துவீசிய சுரங்க லக்மால், 10 ஓவர்கள் பந்துவீசி நான்கு ஓட்டமற்ற ஓவர்களுடன், 13 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 20.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் உள்ளது 114 ஓட்டங்களை பெற்றது.

உபுல் தரங்க 49, ஆட்டமிழக்காது நிரோஷன் திக்வெல்ல 26 ஓட்டங்களை, அஞ்சலோ மெத்திவ்ஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆட்ட நாயகனாக சுரங்க லக்மால் தெரிவு செய்யப்பட்டார்.

மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது.

 


1st ODI: SLvIND; களத்தடுப்பில் இலங்கை (11.47am)

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (10) தரம்சாலா பகுதியிலுள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க அரங்கில் இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணி சார்பில் குசல் பெரேராவிற்கு பதில் லஹிரு திரிமான்ன அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் இன்றைய போட்டிக்காக அஜிங்யா ரஹானே இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை:
1. உபுல் தரங்க
2 தனுஷ்க குணதிலக
3 லஹிரு திரிமன்ன
4 அஞ்சலோ மெத்திவ்ஸ்
5 அசேல குணரட்ன
6 நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் காப்பாளர்
7 திசர பெரேரா (அணி தலைவர்)
8 சச்சித் பத்திரண
9 சுரங்க லக்மால்
10 அகில தன்ஞ்சய
11 நுவன் பிரதீப்.

இந்தியா:
1 ரோஹித் சர்மா (அணி தலைவர்)
2 ஷிகர் தவான்
3 ஷ்ரேஸ் ஐயர்
4 மனிஷ் பாண்ட
5, தினேஷ் கார்த்திக்
6 மஹேந்திர சிங் தோனி
7 ஹார்டிக் பாண்ட்யா
8 புவனேஷ்வர் குமார்
9 குல்தீப் யாதவ்
10 ஜஸ்பிரிட் பும்ரா
11 யுஷ்வேந்திர சஹால்

 

 


Add new comment

Or log in with...