சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கு தமிழரசுக் கட்சி கட்டுப் பணம் | தினகரன்


சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கு தமிழரசுக் கட்சி கட்டுப் பணம்

 

உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் (06) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மற்றும் தென்மராட்சி பிரதேச தமிழரசுக் கட்சியின் அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலன் மற்றும் சுகிர்தன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மேலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் போட்டியிடுவதில்லை என ரெலோ அறிவித்துள்ளது.
தற்போது அந்தச் சின்னத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் போட்டியிடுவதற்கு புளொட் கட்சி மட்டுமே உள்ளது. எனினும் புளொட்டின் உறுதியாக முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...