Home » 2023 இறுதிக்குள் 29 அபிவிருத்தி திட்டங்கள்; வர்த்தமானியில் வெளியிட அரசங்கம் முடிவு

2023 இறுதிக்குள் 29 அபிவிருத்தி திட்டங்கள்; வர்த்தமானியில் வெளியிட அரசங்கம் முடிவு

by mahesh
November 1, 2023 10:50 am 0 comment

அரசாங்கம் இவ்வருடத்தில் மேற்கொள்ளவுள்ள 29 அபிவிருத்தி திட்டங்களை வர்த்தமானியில் வெளியிட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

பெரிய மாத்தறை அபிவிருத்தித் திட்டம், ஹிக்கடுவ , அம்பலாங்கொட நகர சபை , சீதாவக பிரதேச சபை, சீதாவகபுர, பாணந்துற, ஹொரணை, வத்தளை, ஜா-எல, கம்பஹ, கட்டான, மஹர, கெக்கிவை, தலா, மாவனல்லை, குண்டசாலை, நாவலப்பிட்டி, கம்ப​ைள, ஹற்றன், வெலிகம, பண்டாரவளை, வெல்லவாய, வவுனியா, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேச அபிவிருத்தித் திட்டங்களே வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளன.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புக்கமைய திருகோணமலை அபிவிருத்தித் திட்டம், எல்ல அபிவிருத்தித் திட்டம், ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஹிக்கடுவ அபிவிருத்தித் திட்டங்கள் என்பனவும் வர்த்தமானியில் வெளியிடப்பவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவற்றில் எல்ல அபிவிருத்தித் திட்டம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை இவ்வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஐந்து அபிவிருத்தி திட்டங்களை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT