ட்ரம்பின் ஜெருசல அறவிப்புக்கு சர்வதேசம் எதிர்ப்பு | தினகரன்

ட்ரம்பின் ஜெருசல அறவிப்புக்கு சர்வதேசம் எதிர்ப்பு

 

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பல்வேறு நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

நேற்று (06) அவர் விடுத்துள்ள குறித்த அறிவித்தலில், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் சமாதானத்தை உருவாக்கும் நோக்கில் நீண்டகாலமாக தாமதித்திருந்த தீர்மானம் ஒன்றையே தாம் மேற்கொண்டிருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜெருசலம் நகரம், இஷ்ரேல் - பாலஷ்தீனுக்கு இடையில் மிகப்பெரிய சர்ச்சையாக இருக்கிறது.

இந்நிலையில் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சர்வதேச அளவில் இந்த தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்றன.

குறிப்பாக அமெரிக்கா இனியும் சமாதான தூதுவராக செயற்பட முடியாது என்று பாலஸ்தீனத் தலைவர் மொமஹட் அபாஸ் அறிவித்துள்ளார்.

சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு "நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற" செயல் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவையடுத்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 நாடுகளில், 8 நாடுகள் இந்த வார இறுதியில் அவசர கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளன.

இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967 ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.

 


Add new comment

Or log in with...