புகையிரத பணி புறக்கணிப்பு; பருவகால சீட்டுக்கு இ.போ.ச. இலவசம் | தினகரன்

புகையிரத பணி புறக்கணிப்பு; பருவகால சீட்டுக்கு இ.போ.ச. இலவசம்


புகையிரத பருவகால சீட்டுகளை வைத்திருப்போர், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

புகையிரத சாரதிகளின் பணி புறக்கணிப்பு மற்றும் அவர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து புகையிரத சாரதிகள் மேற்கொண்டு வந்த பணி புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில், புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் சங்கமும் இணைந்து இன்று நள்ளிரவு (08) முதல் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...