தாய்வானில் 9 மணிநேரம் வானவில் நீடித்து சாதனை | தினகரன்

தாய்வானில் 9 மணிநேரம் வானவில் நீடித்து சாதனை

தாய்வானில் சுமார் 9 மணி நேரம் நீடித்த வானவில், உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, இங்கிலாந்தில் சுமார் 6 மணி நேரம் நீடித்த வானவில் தற்போது உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் 30ஆம் திகதி, தாய்வானை அலங்கரித்த வானவில் அந்தச் சாதனையை முறியடித்துள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

தைப்பேயில், சீனக் கலாசாரப் பல்கலைக்கழகத்தின் இரண்டு பேராசிரியர்கள் வானவில்லைப் படமெடுத்து அது தொடர்பான விபரங்களைச் சேகரித்துள்ளனர்.

வானவில் காலை 6.57க்குத் தோன்றி, பிற்பகல் 3.55வரை நீடித்ததாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதற்கு முந்தைய வாரம் தோன்றிய வானவில் 6 மணி நேரம் நீடித்ததால், இம்முறை வானத்தில் 7 நிறங்கள் எவ்வளவு நேரம் நீடித்திருக்கும் என்பதைக் காண ஆவலாக இருந்ததாகப் பேராசிரியர்கள் கூறினர்.

வெவ்வேறு கோணங்களிலும் நேரத்திலும் மாணவர்கள் படமெடுத்து, பல்கலைக்கழகத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர். சுமார் 10,000 புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 


Add new comment

Or log in with...