நைஜீரிய சர்வாதிகாரி திருடிய பணத்தை கொடுக்கிறது சுவிஸ் | தினகரன்

நைஜீரிய சர்வாதிகாரி திருடிய பணத்தை கொடுக்கிறது சுவிஸ்

நைஜீரிய முன்னாள் சர்வாதிகாரி சானி அபசா களவாடிய சுமார் 321 மில்லியன் டொலர் பொது நிதியை சுவிட்சர்லாந்து அந்நாட்டுக்கு திருப்பியளிக்கவுள்ளது.

சுவிஸ் வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட இந்த பணம் 2014இல் அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றினால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தை திரும்ப பெறுவது குறித்து சுவிட்சர்லாந்து மற்றும் நைஜீரியாவுக்கு இடையில் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது.

இராணுவ ஆட்சியாளரான அபசா 1993 முதல் 1998 இல் மரணிக்கும் வரையான தனது ஆட்சிக் காலத்தில் நைஜீரிய மத்திய வங்கியில் இருந்து 2.2 பில்லியன் டொலர் பணத்தை கையாடியதாக சந்தேகிக்கப்படுகிறது.

அப்பா அபசாவுக்கு எதிராக ஜெனிவா அரச வழக்கறிஞரின் சட்ட செயல்முறைக்கு அமையவே இந்த நிதி முடக்கப்பட்டது என்று சுவிஸ் அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியின் கண்காணிப்பின் கீழ் இந்த நிதி திரும்ப வழங்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

உழலுக்கு எதிராக செயற்பட உறுதி அளித்திருக்கும் நைஜீரிய ஜனாதிபதி முஹமது புஹாரி கடந்த தசாப்தங்களில் அதிர்ச்சி தரும் அளவு பணம் திருடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 


Add new comment

Or log in with...