இந்த ஆண்டில் அதிக விக்கெட் லயனை சமன் செய்த அஸ்வின் | தினகரன்

இந்த ஆண்டில் அதிக விக்கெட் லயனை சமன் செய்த அஸ்வின்

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள அவுஸ்திரேலிய வீரர் நதன் லயனை சமன் செய்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள அவுஸ்திரேலிய வீரர் நாதன் லயனை அவர் சமன் செய்தார்.

லயன் இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 9 டெஸ்டில் 55 விக்கெட்டை தொட்டார். அஸ்வின் 11 டெஸ்ட்டில் 55 விக்கெட் எடுத்துள்ளார். இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.

2-வது இன்னிங்சில் யார் அதிக விக்கெட் எடுக்கிறார்களோ அவர் முன்னிலை பெறுவார்.

லயன் 50 ஓட்டங்கள் கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றியதே ஒரு இன்னிங்சின் சிறந்த பந்துவிச்சாகும். அஸ்வின் 41 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட் எடுத்தததே சிறந்ததாகும்.

தென்னாபிரிக்க வீரர் ரபடா 54 விக்கெட்டும், இலங்கையை சேர்ந்த ஹேரத் 52 விக்கெட்டும், ஜடேஜா 51 விக்கெட்டும் எடுத்து அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர். 


Add new comment

Or log in with...