பாதுகாப்பு அலுவலக பிரதானியின் தாய் காலமானார் | தினகரன்

பாதுகாப்பு அலுவலக பிரதானியின் தாய் காலமானார்

 

பாதுகாப்பு அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் தாயாரான டொடி விஜேகுணரத்ன உபாசிகா இன்று (06) காலை காலமானார். இறக்கும்போது அவருக்கு 85 வயதாகும்.

காலம் சென்ற பிரேமதாச விஜேகுணரத்னவின் மனைவியான திருமதி விஜேகுணரத்ன, ராஜா, ரவீந்திர, லலனி, ஜனித, அசோக ஆகிய ஐந்து பிள்ளைகளின் தாயாராவார்.

அவரது பூதவுடல் மவுன்ட் கிரஸ்ட், அலுத்கம வீதி, யட்டதொலவத்தை, மதுகம எனும் முகவரியிலுள்ள அவரது வீட்டில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதிக் கிரியைகள், எதிர்வரும் சனிக்கிழமை (09) பிற்பகல், மதுகம பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...