குரோஷிய போர் குற்றவாளி சர்வதேச நீதிமன்றத்தில் நஞ்சருந்தி தற்கொலை | தினகரன்

குரோஷிய போர் குற்றவாளி சர்வதேச நீதிமன்றத்தில் நஞ்சருந்தி தற்கொலை

ஹேகில் உள்ள ஐ.நா யுத்த குற்றங்களுக்கான நீதமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது யுத்த குற்றவாளியான முன்னாள் பொஸ்னிய குரோசிய இராணுவ தளபதி ஒருவர் நஞ்சரிருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

பொஸ்னியாவின் 1992–95 யுத்தத்தில் முன்னாள் கட்டளை தளபதியாக இருந்த 72 வயது ஸ்லோபொடன் பிரல்ஜக் மீது விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை கடந்த புதன்கிழமை நீதிபதிகள் மீண்டு உறுதி செய்து தீர்ப்பளித்ததை அடுத்தே அவர் நஞ்சரிந்தியுள்ளார்.

இதன்போது அவர், “நான் ஒரு யுத்த குற்றாவாளி இல்லை” என்று கூச்சலிட்டுக் கொண்டே சிறு குப்பியை எடுத்து அருந்த ஆரம்பித்துள்ளார். பின்னர் “நான் நஞ்சு குடித்தேன்” என்று நீதிபதிகளிடம் குறிப்பிட்டார். அப்போது அவரது வழக்கறிஞர், “நஞ்சு குடித்ததாக எனது கட்சிக்காரர் கூறுகிறார்” என்று சத்தம் போட்டார். இதனை அடுத்து தலைமை வழக்கறிஞர் உடன் விசாரணையை ஒத்திவைத்ததோடு அம்புலன் உடன் வரைவழைக்கப்பட்டது. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

பொஸ்னிய யுத்தத்தில் மொஸ்டார் நகரில் இடம்பெற்ற குற்றங்களுக்காக 2013 ஆம் ஆண்டு பிரல்ஜக்கிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட ஆறு முன்னாள் பொஸ்னிய குரோஷிய அரிசியல்வாதிகள் மற்றும் இராணுவ தலைவர்களில் பிரல்ஜக்கும் ஒருவராவார்.

இவர்கள் தம்மீதான இறுதி தீர்ப்புக்காகவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

யுத்தத்தில் பொஸ்னிய செர்பியர்களுக்கு எதிரான கூட்டாளிகளாக இருந்தபோதும் பொஸ்னிய குரொஷியர் மற்றும் முஸ்லிம்கள் 11 மாத காலம் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டனர். இதில் மொஸ்டார் நகரில் உக்கிர மோதல் இடம்பெற்றது. 


Add new comment

Or log in with...