வட கொரியாவை துண்டிக்க அமெ. உலகுக்கு அழுத்தம் | தினகரன்

வட கொரியாவை துண்டிக்க அமெ. உலகுக்கு அழுத்தம்

வட கொரியா மற்றொரு ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட நிலையில் அனைத்து நாடுகளும் அந்த நாட்டுடனான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை துண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வட கொரியாவுக்கான எண்ணெய் விநியோகத்தை நிறுத்தும்படி சீன ஜனாதிபதியை ஜனாதிபதி டிரம்ப் கோரி இருப்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி பாதுகாப்பு சபையில் குறிப்பிட்டார். அமெரிக்கா மோதலை விரும்பவில்லை ஆனால் யுத்தம் வெடித்தால் வட கொரிய ஆட்சி முழுமையாக அழிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

வட கொரியா இரண்டு மாதங்களின் பின் கடந்த புதன்கிழமை ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இந்த ஏவுகணை அமெரிக்கா எங்கும் தாக்கும் திறன் கொண்டது என்று வட கொரியா கூறியுள்ளது.

பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஹேலி, வட கொரிய சர்வாதிகாரி நேற்று எம்மை மேலும் யுத்தத்திற்கு நெருங்கச் செய்துள்ளார். அது மேலும் தூரத்தில் இல்லை” என்று குறிப்பிட்டார். 


Add new comment

Or log in with...