Friday, March 29, 2024
Home » கண்டி கட்டுக்கலையில் இஸ்லாமிய கலாசார சமய பண்பாட்டு கண்காட்சி

கண்டி கட்டுக்கலையில் இஸ்லாமிய கலாசார சமய பண்பாட்டு கண்காட்சி

by mahesh
November 1, 2023 3:16 pm 0 comment

கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் மக்தப் அல் குர்ஆன் அரபு மத்ரஸா மாணவர்களின் இஸ்லாமிய கலாசார சமய பண்பாட்டுப் பாரம்பரியங்களை எடுத்துக் காட்டும் விசேட கண்காட்சி பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாகிஸ்தான் நாட்டுக்கான வதிவிடப் பிரதிநிதியும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான அப்சல் மரைக்கார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதன் போது கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சமேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக், கண்டி சிட்டி ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி பாயிஸ், கட்டுக்கலை அல் புர்க்கானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர், பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் கொழும்பு தலைமையகக் கட்டடம் மற்றும் அவற்றின் செயற்பாடு தொடர்பான கண்காட்சிப் பிரிவு, ஜனாஸாவை எவ்வாறு நல்லடக்கம் செய்தல் தொடர்பான கண்காட்சிப் பிரிவு, புனித அல்குர்ஆன் ஆரம்பத்தில் எவ்வாறு எழுதப்பட்டது, தொகுப்பட்டது என்பது தொடர்பான கண்காட்சிப் பிரிவு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பிரிவு, அல் புர்க்கானிய்யா அரபுக் கல்லூரி தொடர்பான கண்காட்சிப் பிரிவு, ஜும்ஆ தொழுகை மேற்கொள்ளல் தொடர்பான பிரிவு, மக்கா மதீனாஇ பைத்துல் அக்ஸா போன்ற கண்காட்சிப் பிரிவுகளுடன் பெண்பிள்ளைகளின் கண்காட்சிப் பிரிவில் சமையல், பிள்ளை வளர்ப்பு, சுகாதாரம் போன்ற பல செயற்பாட்டு விளக்கங்களுடன் அமைந்த கண்காட்சிப் பிரிவுகளும் இங்கு அமைக்கப்பட்டிருந்தன

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.


பாகிஸ்தானுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார் பங்கேற்பு

 

இக்பால் அலி - (மாவத்தகம தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT