இலங்கைக்கு அப்பால் நகர்ந்தது 'ஓகி'சூறாவளி | தினகரன்

இலங்கைக்கு அப்பால் நகர்ந்தது 'ஓகி'சூறாவளி

அபாயம் நீங்கியது

இலங்கைக்கு அருகே அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக உருமாறி நாட்டை விட்டு நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலை தெரிவித்தது. ஓகி (OCKHI)என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி நேற்று இரவு 8.30 மணியவில், கொழும்பிலிருந்து மேற்கே 340 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருப்பதாக திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதன் தாக்கம் காரணமாக இன்றும் நாட்டில் வடக்கு, வட மத்திய, ஊவா, தெற்கு, மேற்கு,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையின்போது கடுங் காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமென்பதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்ெகாள்ளப்பட்டுள்ளனர்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...