மண்சரிவு அபாய எச்சரிக்கை | தினகரன்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

 

சீரற்ற காலநிலைமை காரணமாக மண் சரிவு எச்சரிக்கை நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், இரத்தினபுரி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, மாத்தறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி மையத்தினால் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பான பிரதேசங்களுக்குச் செல்லுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரகல பிரதேச,  பதுளை - கொழும்பு வீதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...